கடலூரில் அதிகாரிகள் அதிரடி : ரூ.2.40 லட்சம் பான்பராக் பறிமுதல்
கடலூர்: பான்பராக் உள்பட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் முத்துகிருஷ்ணாபுரம் பிள்ளைத் தெருவில் தனியார் ஏஜென்சியில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள பான்பராக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை அழிக்க கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி பான்பராக் பொருட்கள் அழிக்கப்பட்டன. பான்பராக், குட்கா போன்றவற்றை விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயுமென உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா எச்சரித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM