புழல்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.5 லட்சம் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து சென்னைக்கு புழல் வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக புழல் உதவி கமிஷனர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ், எஸ்ஐ. தனபால் ஆகியோர் நேற்று மதியம் புழல் ஜிஎன்டி சாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது நிற்காமல் சென்ற மினி லாரியை போலீசார் சுற்றிவளைத்தனர். டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மினி லாரியை போலீசார் சோதனை செய்தபோது 27 செம்மர கட்டைகள் இருந்தது. இதையடுத்து, மினி லாரியையும், செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். செம்மர கட்டை மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள புழல் போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM