திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 6ம் தேதி வழக்கம் போல காலையில் வேலைக்கு சென்று விட்டார். மனைவி குணசெல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு மாடியில் துணி காய போட சென்றார். துணியை காயப்போட்டுவிட்டு கீழே வந்தார் குணசெல்வி. அந்த நேரத்தில் இவரது வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த குணசெல்வி, ‘திருடன், திருடன்‘ என சத்தம் போட்டார். அதற்குள் அவர் மாயமாகி விட்டார். வீட்டில் இருந்து 9 பவுன் நகை மாயமானது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்கு பதிந்து தேடினார். இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், திருவொற்றியூர் சீனிவாசக பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராசையா (18) என்பதும், பாலசுப்பிரமணியம் வீட்டில் திருடியதும் தெரிந்தது. திறந்திருக்கும் வீடுகளில் நகை, பணத்தை திருடி செலவு செய்வது இவரது வாடிக்கை. மணலி உள்ளிட்ட பல இடங்களில் இவர் கைவரிசையை காட்டியுள்ளார். அவரிடம் இருந்து 19 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM