பணம் கேட்டு மிரட்டும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருங்குளம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. அருங்குளம், குன்னத்தூர், தாஸ்ரெட்டி கண்டிகை, மாமண்டூர், நெமிலி, அருங்குளம் கண்டிகை, கேஏ. கண்டிகை, அடுக்கல்பட்டு, சந்தான கோபாலபுரம், தாளவேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், ஆடு, மாடு, கோழிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு வருகின்றனர். கால்நடை மருத்துவ மனையில் சினை ஊசி போடவும், நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர் பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நோய் மற்றும் கால் உடைந்து நடக்க முடியாமல் கிடக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க செல்ல டாக்டர் மறுத்து விடுகிறாராம். கண்டிப்பாக வரவேண்டும் என்றால் அதிக பணம் வேண்டும் என்று கேட்கிறாராம். பணம் கேட்கும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா, திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ், திருத்தணி கால் நடை உதவி இயக்குனர் செல்லையா ஆகியோருக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM