திருவள்ளூர்: வேகமாக வந்த லாரி மீது பைக் மோதியதில் ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி அருகே திருநின்றவூர் சூரத்தம்மன் நகரில் வசிப்பவர் பரசுராமன். இவரது மகன் நிலவு(25). ஏசி மெக்கானிக். நேற்றுமாலை திருவள்ளூர் அருகே மணவாளன் நகரில் இருந்து தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு பைக்கில் சென்றார். மேல்நல்லாத்தூர் அருகே அவரது பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் நிலவு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் மணவாளன்நகர் போலீசார் சென்று, நிலவு உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM