ஓய்வு பெற்ற ஐ.சி.எப் ஊழியர் வீட்டில் 29 பவுன் திருட்டு
சென்னை: சென்னை கொளத்தூர் அம்பேத்கார் நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணி (64). ஓய்வு பெற்ற ஐ.சி.எப் ஊழியர். திருவள்ளூரில் வசிக்கும் இவரது மகள் ஸ்வேதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக நேற்று மாலை திருவள்ளூருக்கு மணி சென்றார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் மணியின் மகன் சுதாகர் என்பவர், தந்தை இருக்கும் வீட்டு பக்கம் தற்செயலாக வந்தார். அப்போது கதவுகள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தந்தை மணிக்கு போன் செய்தார். மணி விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 29 பவுன் நகை, புடவை உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தன. இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM