Tamil Month Rasi Palan Maasi 2013
2013
06
Aug
காதல் திருமணம் செய்த நாம் தமிழர் கட்சி செயலாளர் வெட்டிக் கொலை திருத்தணியில் நள்ளிரவு பயங்கரம்


திருத்தணி:திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன் ராஜா (32). இவர், திருத்தணி பெரிய தெருவில் வசிக்கின்றார். திருத்தணியில் கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த  சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

கோணி வாங்குவதற்காக நண்பருடன் ஆந்திராவுக்கு செல்வதாக நேற்று முன்தினம் மனைவி யிடம் கூறிவிட்டு பசும்பொன்ராஜா சென்றார். இதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பசும்பொன்ராஜா செல்போனுக்கு மனைவி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இதுசம்பந்தமாக திருத்தணி காவல்நிலையத்தில்  சரண்யா புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பசும்பொன்ராஜாவை  தேடி வந்தனர்.
இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர் வீமராஜ் ஆகியோர் நள்ளிரவு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந்தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.  பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்றுவிட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காதல் திருமணம் செய்த பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளதால் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran