தி.மலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் 3 குழந்தைகளின் தந்தை கைது
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.செய்யாறு டவுன் கன்னி நகரை சேர்ந்தவர் சரவணன்(28). திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணன், சிறுமியை வழிமறித்து வாயை பொத்தி கோயிலின் பின்புறம் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் அவரது தந்தை தேடிச்சென்றார். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குபதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM