நின்ற லாரி மீது கார் மோதியதில் முன்னாள் எம்எல்ஏ மகன் பலி இரண்டு மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம்
மேலூர்:மதுரை அருகே நின்ற லாரி மீது கார் மோதியதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் பலியானார். இரண்டு மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தென்காசி அருகே கீழப்பாவூரை சேர்ந்தவர் சேகர் ராமசாமி(55). இவர் விவசாயம் மற்றும் வியபாரம் செய்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகள் கோப்பெருந்தேவி(17)க்கு நேற்று மருத்துவ கவுன்சலிங் நடந்தது. இதற்காக சேகர் ராமசாமி தனது மூத்த மகள் உமாசெல்லம்(23), கோப்பெருந்தேவி ஆகியோருடன் சென்னையில் நடந்த மருத்துவ கவுன்சலிங்கில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பினார். காரை டிரைவர் பரம்மையா பாண்டியன் ஓட்டினார். இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர்களது கார் கொட்டம்பட்டி அருகே காடாம்பட்டி விளக்கில் வந்த போது ரோட்டின் ஓரத்தில் சிமென்ட் ஏற்றி நின்ற லாரி மீது மோதியது.
இச்சம்பவத்தில் கார் அப்பளம் போல் நெருங்கியது. சம்பவ இடத்திலேயே சேகர் ராமசாமி ரத்த வெள்ளத்தில் இறந்தார். உமாசெல்லம், கோப்பெருந்தேவி, டிரைவர் பரம்மையா பாண்டியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மயங்கிய நிலையில் 3 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இறந்த சேகர் ராமசாமியின் தந்தை நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆலங்குளத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கொட்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM