அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை கண்டித்து கோட்டையை நோக்கி நாளை பேரணி தமிழ்வழி கல்வி இயக்கம் நடத்துகிறது
சென்னை:அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி பிரிவுகளை தொடங்குவதை கைவிடக்கோரி தமிழ்வழி கல்வி கூட்டு இயக்கம் சார்பில் நாளை கோட்டை நோக்கி பேரணி நடக்கிறது. இதுகுறித்து தமிழ் வழிக்கல்வி கூட்டு இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில பயிற்று மொழி பிரிவுகளை அரசு தொடங்குகிறது. ஆங்கில வழி கல்வியை நடத்தும் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தி சமச்சீர் தமிழ் வழி கல்வி நிறுவனங்களாக அவற்றை மாற்ற வேண்டிய அரசு, அரசு பள்ளிகளையும் ஆங்கில வழி கல்விக்கு மாற்றுகிறது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகளை தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
உயர் கல்வியில் கிராம மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி நாளை கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM