தென்மேற்கு பருவ மழை தீவிரம் கேரளாவில் திடீர் நிலச்சரிவு பெண்கள் உள்பட 7 பேர் பலி
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 5 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு உள்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இடுக்கி மாவட்டம் தீருமேட்டில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பெய்துள்ளது. மூணாறில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழையால் நேற்றிரவும் இன்று காலையும் இடுக்கி மாவட்டத்தில் 17 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாப்பச்சன் மற்றும் அவரது மனைவி தங்கம்மாள், சாரதா, கிருஷ்ணா (16), ஜோஸ்லின் (12) உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடுபுழா அருகில் உள்ள மலையிஞ்சி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் தாய், மகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது. நிலச்சரிவால் இடுக்கி மாவட்டமே துண்டிக்கப்பட்டுள்ளது. கொல்லம் & தேனி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நேற்றிரவு முதல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இடுக்கி மாவட்டத்துக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
நேற்று கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கனமழைக்கு 4 பேர் பலியாகி விட்டனர். இதையடுத்து கடந்த 2 நாட்களில் கேரளாவில் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 2:23:54 PM
-Updated 8/12/2025 2:19:39 PM
-Updated 8/12/2025 2:15:21 PM
-Updated 8/12/2025 2:15:13 PM
-Updated 8/12/2025 2:15:04 PM
-Updated 8/12/2025 2:14:56 PM
-Updated 8/10/2025 12:31:56 PM
-Updated 8/10/2025 12:31:44 PM
-Updated 8/10/2025 12:31:28 PM
-Updated 8/10/2025 12:30:51 PM
-Updated 8/10/2025 12:30:41 PM
-Updated 8/10/2025 12:30:32 PM
-Updated 8/10/2025 12:30:13 PM
-Updated 8/10/2025 12:30:01 PM
-Updated 8/10/2025 12:28:40 PM