திருவொற்றியூர்:தூத்துக்குடியை சேர்ந்தவர் பாலாஜி (45). லாரி டிரைவர். கடந்த 15ம் தேதி துறைமுகத்தில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள செம்பு, கம்பிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லிக்கு புறப்பட்டார். எர்ணாவூர் பாலம் அருகே சென்றபோது இருவர் லிப்ட் கேட்டு ஏறினார். மணலி அருகே சென்றபோது திடீரென இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலாஜியின் கைகளை கட்டி கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்தினர். சம்பவம் குறித்து மணலி போலீசில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பள்ளிக்கரணையில் லாரியையும், விச்சூரில் பொருட் களையும் மீட்டனர். பின்னர் கடத்தல் ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து விசாரித்தபோது, திருவொற்றியூரை சேர்ந்த நாகராஜ் (42) என்பவர்தான் லாரியை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவரை நேற்று திருவொற்றியூரில் போலீசார் கைது செய்தனர். வாகனங்களில் லிப்ட் கேட்டு ஏறி டிரை வரை அடித்து உதைத்துவிட்டு பொருட்களுடன் லாரியை கடத்தும் வேலையில் இவர் மற்றும் இவரது கூட்டாளிகள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகள் பாஸ்கர், சீனிவாசன், ரவிச்சந்தின், ஜீவானந்தம், தியாகராஜன், கிருஷ்ணன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM
-Updated 7/22/2013 2:00:01 PM
-Updated 7/22/2013 1:59:51 PM
-Updated 7/22/2013 1:58:08 PM
-Updated 7/22/2013 1:47:36 PM
-Updated 7/22/2013 1:47:26 PM
-Updated 7/22/2013 1:47:16 PM
-Updated 7/22/2013 1:47:05 PM
-Updated 7/22/2013 1:46:54 PM
-Updated 7/22/2013 1:46:41 PM
-Updated 7/20/2013 12:20:38 PM