மேட்டூர்:மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் 24 மணி நேரத்தில் நீர்மட்டம் ஒரு அடியை விட குறைவாகவே உயர்ந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பி உள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்தது.
தற்போது கபினி அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர் வரத்து சரிந்துள்ளது. நேற்று 15,095 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,598 கன அடி வீதம் நீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3633 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் மட்டம் 74.14 அடியாக உள்ளது. நேற்று நீர் மட்டம் 73.21 அடியாக இருந்த நிலையில் 24 மணி நேரத்தில் ஒரு அடியை விட குறைவாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 36.36 டிஎம்சி.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/23/2013 2:49:22 PM
-Updated 7/23/2013 2:49:05 PM
-Updated 7/23/2013 2:48:39 PM
-Updated 7/23/2013 2:48:19 PM
-Updated 7/23/2013 2:48:02 PM
-Updated 7/23/2013 2:47:47 PM
-Updated 7/23/2013 2:41:00 PM
-Updated 7/23/2013 2:40:51 PM
-Updated 7/23/2013 2:40:43 PM
-Updated 7/23/2013 2:40:34 PM
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM