சேலம்:தர்மபுரியில் நடந்த கிட்னி தான மோசடி வழக்கை சேலம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் சங்ககிரியை சேர்ந்த டாக்டர் கணேசன் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தர்மபுரி நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்பின் சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் கிட்னி தான மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும், எந்த வழக்கிலும் தன்னை கைது செய்ய கூடாது எனவும் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கணேசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், டாக்டர் கணேசனுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது எனவும், கொடுக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தர்மபுரி நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி வணங்காமுடி, டாக்டரின் இடைக்கால ஜாமீன் மனுவை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த இந்த வழக்கு சேலம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கிட்னி புரோக்கர் அய்யாவு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்னொரு வழக்கில் டாக்டர் கணேசனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM
-Updated 7/22/2013 2:00:01 PM
-Updated 7/22/2013 1:59:51 PM
-Updated 7/22/2013 1:58:08 PM
-Updated 7/22/2013 1:47:36 PM
-Updated 7/22/2013 1:47:26 PM
-Updated 7/22/2013 1:47:16 PM
-Updated 7/22/2013 1:47:05 PM
-Updated 7/22/2013 1:46:54 PM
-Updated 7/22/2013 1:46:41 PM
-Updated 7/20/2013 12:20:38 PM