வடபெரும்பாக்கத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
புழல்:தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.சென்னை புழல் ஜிஎன்டி சாலை மசூதி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை 2 மாதத்துக்கு முன்பு கிரான்ட்லைன் கிருஷ்ணா நகருக்கு மாற்றினர். அந்த கடையை பூட்ட வேண்டும் என்று மக்கள் கூறிவந்தனர். நேற்று 50&க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்.
இதற்கிடையே புழல் & வடபெரும்பாக்கம் சாலையில் உள்ள மைக்ரோ மார்வெல் நகரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடு நடந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் நேற்று மாலை கடையின் அருகே திரண்டனர். கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புழல் இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் தலைமையில் போலீசார் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மாணவ, மாணவிகள், பெண்கள் சாலையில் செல்ல முடியாது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக் கூடாது’’ என்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/22/2013 12:30:19 PM
-Updated 6/22/2013 12:30:10 PM
-Updated 6/22/2013 12:30:01 PM
-Updated 6/22/2013 12:28:51 PM
-Updated 6/22/2013 12:24:42 PM
-Updated 6/22/2013 12:24:18 PM
-Updated 6/22/2013 12:14:18 PM
-Updated 6/22/2013 12:13:30 PM
-Updated 6/22/2013 12:10:40 PM
-Updated 6/22/2013 12:10:22 PM
-Updated 6/22/2013 12:10:00 PM
-Updated 6/21/2013 3:11:08 PM
-Updated 6/21/2013 3:10:30 PM
-Updated 6/21/2013 3:10:19 PM
-Updated 6/21/2013 3:09:15 PM