பெட்ரோல் பங்க் கொள்ளையர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் மே.வங்கத்தில் சிக்கினார்
சூலூர்:கோவை அவிநாசி சாலை சூலூர் பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் கடந்த மாதம் 4 பேர் கும்பல் காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்தது. பங்க் உரிமையாளர் இளங்கோ மற்றும் சிலர் கார்களில் அவர்களை விரட்டி பிடித்தனர். கொள்ளையில் ஈடுபட்ட டூவீலர் மெக்கானிக் ஞானசுந்தரம் (30), டிராக்டர் டிரைவர் பழனிச்சாமி (31), பஸ் டிரைவர்கள் பூபதி (45), சக்திவேல் (40) ஆகிய 4 பேரையும் சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார்பன் ரக துப்பாக்கி, அமெரிக்க ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கத்தி, ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கார்பன் துப்பாக்கியை கொள்ளை கும்பலுக்கு சப்ளை செய்த கும்பலை சேர்ந்த சையத் உசேன் (30) என்பவரை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஐ. அருண் தலைமையிலான தனிப்படையினர் மேற்குவங்கத்தில் பிடித்து கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். தீவிரவாத மற்றும் நக்சல் அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/19/2013 2:16:59 PM
-Updated 6/19/2013 2:16:47 PM
-Updated 6/19/2013 2:16:36 PM
-Updated 6/19/2013 2:12:55 PM
-Updated 6/19/2013 2:12:35 PM
-Updated 6/19/2013 2:12:22 PM
-Updated 6/19/2013 2:12:14 PM
-Updated 6/18/2013 3:37:39 PM
-Updated 6/18/2013 3:37:31 PM
-Updated 6/18/2013 3:36:51 PM
-Updated 6/18/2013 3:26:20 PM
-Updated 6/17/2013 2:47:32 PM
-Updated 6/17/2013 2:47:24 PM
-Updated 6/17/2013 2:47:16 PM
-Updated 6/17/2013 2:38:20 PM