ஐபில் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோர் ஜாமீன் கேட்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, வினய்குமார் கண்ணா, 2 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 17 புக்கிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஜிம்பாப்வே போகும் இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் ஜூலை 11ந்தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் அங்கிருந்து இந்திய அணி ஜிம்பாப்வே புறப்பட்டு சென்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த தொடர் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கு நேற்று பிசிசிஐ செயற்குழுவில் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது. எத்தனை போட்டிகள் நடைபெறும் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
டோனியிடம் விசாரணை
ஐபிஎல் சென்னை அணி மற்றும் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் டோனி தனியார் விளையாட்டு நிறுவனம் ஒன்றின் பங்குகளை வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள ரெய்னா, ஜடேஜாவிற்கு போட்டிகளில் விளையாட டோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டோனியிடம் விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடிந்ததும் விசாரணை நடைபெறக்கூடும்.
ரம்தினுக்கு தடை
வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் தினேஷ் ரம்தின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிஸ்பா அடித்த பந்தை தரையில் பட்டபடி பிடித்துவிட்டு அவுட் கேட்டார். பந்து தரையில் படுவது தெளிவாக தெரிந்தும் ரம்தின் தொடர்ந்து அப்பீல் செய்துகொண்டே இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி, ரம்தினுக்கு 2 ஆட்டங்களில் ஆட தடை விதித்துள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 100 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/19/2013 2:16:59 PM
-Updated 6/19/2013 2:16:47 PM
-Updated 6/19/2013 2:16:36 PM
-Updated 6/19/2013 2:12:55 PM
-Updated 6/19/2013 2:12:35 PM
-Updated 6/19/2013 2:12:22 PM
-Updated 6/19/2013 2:12:14 PM
-Updated 6/18/2013 3:37:39 PM
-Updated 6/18/2013 3:37:31 PM
-Updated 6/18/2013 3:36:51 PM
-Updated 6/18/2013 3:26:20 PM
-Updated 6/17/2013 2:47:32 PM
-Updated 6/17/2013 2:47:24 PM
-Updated 6/17/2013 2:47:16 PM
-Updated 6/17/2013 2:38:20 PM