அதிகாரிகள், பணியாளர்களுக்கு தனி அறை, இருக்கை கிடையாது
பூந்தமல்லி: சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் அலுவலக பணியாளர்கள் 56 பேர் உள்ளனர். கமிஷனர் பணியிடம் கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக உள்ளது. நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர், தலைமை எழுத்தர், வருவாய் ஆய்வாளர், நகர திட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனி அறை கிடையாது. இடம் பற்றாக்குறையால் அதிகாரிகள் அவர்களது இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ரெகார்ட் கிளர்க், அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் என 15க்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கை கிடையாது. இதனால், அவர்களுக்கு பணி செய்வது சிரமமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது. நகராட்சி அலுவலகத்தையொட்டி புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. அங்கு தலைவர் அறை, வரி வசூலிப்பவர் அறை, கூட்ட அரங்கம் மட்டுமே கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்திலும் அதிகாரிகளுக்கு இடம் இல்லை. எனவே அனைத்து வசதிகளும் கொண்டதாக புதிய அலுவலகத்தை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/10/2025 4:03:53 PM
-Updated 6/10/2025 4:03:41 PM
-Updated 6/10/2025 4:03:26 PM
-Updated 6/10/2025 4:03:14 PM
-Updated 6/10/2025 4:00:32 PM
-Updated 6/10/2025 3:58:38 PM
-Updated 6/10/2025 3:58:26 PM
-Updated 6/10/2025 3:58:06 PM
-Updated 6/10/2025 3:57:54 PM
-Updated 6/10/2025 3:54:10 PM
-Updated 6/10/2025 3:53:59 PM
-Updated 6/10/2025 3:53:46 PM
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:50:13 PM
-Updated 6/6/2025 3:45:54 PM