வில்லிவாக்கத்தில் ரயில் இன்ஜின் மோதி பிளஸ் 2 மாணவன் பலி
ஆவடி: தண்டவாளத்தை கடந்தபோது ரயில் இன்ஜின் மோதி பிளஸ் 2 மாணவன் இறந்தான். சென்னை மயிலாப்பூர் நொச்சிகுப்பத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் இளங்கோ (17), கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தான். நேற்று முன்தினம் ரிசல்ட் வெளியானது. 2 பாடத்தில் இளங்கோ தேர்ச்சி பெறவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசாமல் இருந்து வந்தான்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து வெளியே புறப்பட்ட இளங்கோ, வில்லிவாக்கத்தில் உள்ள நண்பரை சந்திக்க சென்றுள்ளான். வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, வேகமாக சென்ற ரயில் இன்ஜின் அவன் மீது மோதியது. படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இளங்கோ பரிதாபமாக இறந்தான். பெரம்பூர் ரயில்வே போலீஸ் எஸ்ஐ குமுதா வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM
-Updated 6/4/2025 3:30:42 PM
-Updated 6/3/2025 3:15:29 PM
-Updated 6/3/2025 12:57:51 PM
-Updated 5/31/2013 3:19:08 PM
-Updated 5/29/2013 4:20:07 PM
-Updated 5/29/2013 4:15:56 PM
-Updated 5/29/2013 4:07:45 PM