ஆவடி: ஆவடி ஸ்ரீசங்கரர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் குமரகுருநாதன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் பாதுகாப்பு போலீஸ் ஏட்டாக பணியாற்றுகிறார். மனைவி மஞ்சுளா (32). கிஷோர் (12) என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிஷோர், 6ம் வகுப்பு படிக்கிறான்.
நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுளா மகன் கிஷோருடன் வெளியே சென்றுவிட்டார்.பின், குமரகுருநாதனுக்கு போன் செய்து, ‘‘நான் புட்லூரில் இருக்கிறேன். என்னை தேட வேண்டாம் என மஞ்சுளா கூறியுள்ளார். இதன் பிறகு குமரகுருநாதன் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆவடி போலீசில் குமரகுருநாதன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளா, கிஷோரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM
-Updated 6/4/2025 3:30:42 PM
-Updated 6/3/2025 3:15:29 PM
-Updated 6/3/2025 12:57:51 PM
-Updated 5/31/2013 3:19:08 PM
-Updated 5/29/2013 4:20:07 PM
-Updated 5/29/2013 4:15:56 PM
-Updated 5/29/2013 4:07:45 PM