ஆவடி: அயப்பாக்கம் கோலடி சாலையில் டிராக்டர் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஆவடி அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணிக்கு திருவேற்காட்டில் இருந்து டிராக்டர் புறப்பட்டது. கோபி (26) என்பவர் ஒட்டிவந்தார். பெண் தொழிலாளர்கள் உள்பட 10 பேர் இருந்தனர்.
அயப்பாக்கம் கோலடி தேவி நகர் பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி, அங்கு உள்ள வளைவில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், கவிதா (22), கொண்டம்மா (25), சின்னம்மா (25), வேளாங்கண்ணி (25),சீனிவாசன் (40), முருகன் (22), ராமு (30), ஷோபன் பாபு (30) தாஸ் (40) மற்றும் டிரைவர் கோபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை பொதுமக்கள் மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிரைவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM
-Updated 6/4/2025 3:30:42 PM
-Updated 6/3/2025 3:15:29 PM
-Updated 6/3/2025 12:57:51 PM
-Updated 5/31/2013 3:19:08 PM
-Updated 5/29/2013 4:20:07 PM
-Updated 5/29/2013 4:15:56 PM
-Updated 5/29/2013 4:07:45 PM