பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியில் 48 மாணவிகள் நாட்டிய அரங்கேற்றம்
திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 48 மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வேலம்மாள் கல்விக்குழுமங்களின் இயக்குனர் எம்.வி.எம். சசிக்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் எம்.வி.எம். நாகமுத்து முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்தி, துணை முதல்வர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் பள்ளியில் பரதநாட்டியம் பயின்ற 48 மாணவிகள் பல்வேறு அபிநயங்களுடன் நாட்டியம் ஆடி அரங்கேற்றம் செய்தனர். இதில் சேலம் டாக்டர் பாலகிருஷ்ணா, இசை மற்றும் நடனப்பள்ளி இயக்குனர் அபர்ணா ரமேஷ், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி நடனத்துறை தலைவர் கலாபாரதி, டாக்டர் சுமதி, வேலம்மாள் பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் பிரதீப் சிவானந்தன் ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM