Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
விளையாடும்போது பூட்டிக்கொண்டதால் விபரீதம் : அலமாரியில் சிக்கிய சிறுவர்கள் மூச்சு திணறி பலி


பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். லாரி புக்கிங் ஏஜென்ட். இவரது மனைவி ஓமனா. கூலி தொழிலாளி. இவர்களது மகன்கள் பிரிஜித் (9), ஸ்ரீஜித் (5). மேலார்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பும், 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். வழக்கம்போல அப்பா, அம்மா இருவரும் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றனர். பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். வீட்டில் இருந்த அலமாரிக்குள் புகுந்து கொண்டு இருவரும் கதவை திறந்து, மூடி விளையாடி இருக்கின்றனர். எதிர்பாராதவிதமாக பூட்டு ‘லாக்’ ஆனது. உள்ளே சிக்கிக்கொண்ட சிறுவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். கதவை திறக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை. அவர்கள் போட்ட சத்தமும் வெளியே கேட்கவில்லை. சிறிது நேரத்தில், இரு குழந்தைகளும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நாகராஜ் - ஓமனா தம்பதியர் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டனர். அக்கம்பக்கத்திலும் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் அலமாரி கதவை திறந்து பார்த்தனர். இரு குழந்தைகளும் உள்ளே செத்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து நெம்மாரா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விளையாட்டு வினையாகி அண்ணன், தம்பியின் உயிரை பறித்த சம்பவம் பாலக்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel