Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தினமும் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 600 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உள்ளது. அதேபோல நேற்று அணைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று அது சற்று உயர்ந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று அணையின் நீர்மட்டம் 26.24 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 6.11 டிஎம்சியாக உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel