Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
சொத்து தகராறில் விபரீதம் : மனைவி வெட்டி கொலை கணவன் தற்கொலை


சித்தூர் : சொத்து தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்து  விட்டு கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தூர் அடுத்த கங்காவரத்தை சேர்ந்தவர் கெடப்பா (60), விவசாயி. இவரது மனைவி ரத்தினம்மாள் (50). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சொத்து பிரச்னை காரணமாக தம்பதியிடையே 3 மாதங்களாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாடுகளுக்கு புல் அறுக்க ரத்தினம்மாள் அருகே உள்ள நிலத்துக்கு சென்றார். அங்கு வந்த கெடப்பா, சொத்து குறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரத்தினம்மாள் கடுமையான வார்த்தையில் திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த கெடப்பா, மனைவியின் கையில் இருந்த கத்தியை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கெடப்பாவும் நிலத்தின் அருகில் உள்ள ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கங்காவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel