Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
10 கோடி ரூபாய் மோசடி சீட்டு நிறுவனம் மீது புகார் : ஊட்டியில் பரபரப்பு


ஊட்டி : நீலகிரி மாவட்டம், கூடலூரை தலைமை இடமாக கொண்டு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில், ‘சூர்யோதயா‘ என்ற சீட்டு நிறுவனம் செயல்பட்டது. மாத சீட்டில் சேர்ந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பலர் பணம் கட்டியுள்ளனர். ரூ.10 கோடி வரை இந்நிறுவனம் வசூலித்துள்ளது. திடீரென இந்நிறுவனத்தினர் தலைமறைவாயினர். ஏமாந்த முதலீட்டாளர்கள் நேற்று ஊட்டி எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், ‘தொடக்கத்தில் முறையாக வசூலித்து பணத்தை திருப்பி கொடுத்தனர். இதை நம்பி பலர் சேர்ந்தோம். சில மாதங்களாக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. நிறுவனத்தினரை கைது செய்து, பணத்தை மீட்டு தரவேண்டும்‘ என்றனர். எஸ்பி செந்தில்குமார் கூறுகையில், ‘20க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கப்படும்’ என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel