Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
செங்குன்றத்தில் இறகு பந்து போட்டி


புழல் : திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி செங்குன்றத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தொடங்கி வைத்தார். இதில் 75 அணிகள் கலந்துகொண்டன. சென்னை வடபழனி ரெயின்போ அணியை சேர்ந்த ராம்தாஸ், புவனேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ரெயின்போ அணியை சேர்ந்த ரோகித், கிரண் ஆகியோர் 3ம் இடம் பிடித்தனர். சென்னை முகப்பேர் பயர்பால் குழுவை சேர்ந்த ஜெய், விக்னேஷ் 2வதாக வந்தனர். முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 7 ஆயிரம் மற்றும் மு.க.ஸ்டாலின் நினைவு கோப்பை வழங்கினர். 2வது இடத்துக்கு ரூ.5 ஆயிரம், கோப்பை, 3  வதுஇடத்துக்கு ரூ.2 ஆயிரம், கோப்பை வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் மா.துரைசாமி, பரிசு, கோப்பைகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை செங்குன்றம் திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel