Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
அனல்மின் நிலையத்தில் திருட்டு : மேலும் 3 வாலிபர்கள் கைது


பொன்னேரி: வடசென்னை அனல்மின் நிலையத்தில் காவலாளிகளை மிரட்டி ஸ்டீல் குழாய்கள் திருடியதாக மேலும் 3 வாலிபர்களை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையம் 2ம் நிலையில் கட்டிட பணிகள் நடக்கிறது. இங்கு கடந்த 10ம் தேதி இரவு பணியில் இருந்த காவலாளிகள் வெங்கடேசன், கந்தன் ஆகியோரை 10 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஸ்டீல் குழாய்களை டிராலியில் ஏற்றிக்கொண்டு தப்பியது. புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எண்ணூரை சேர்ந்த ஆனந்தராஜ் (23), குணசேகரன் (24), ராஜா (22)  தாழங்குப்பம் தீபன்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு எண்ணூர் பகுதியில் பதுங்கியிருந்த வள்ளுவர் நகரை சேர்ந்த மணிகண்டன் (22), விக்ரம் (22), அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த முருகன் (23) ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel