ராணிப்பேட்டை அருகே பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு உதவி ஹெச்எம் ‘பளார்’ : மாணவர்கள் அதிர்ச்சி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியரை உதவி தலைமை ஆசிரியர் அறைந்தார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள விண்ணம்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வேலூரை சேர்ந்த ராமதாஸ் (55) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். காட்பாடியை சேர்ந்த இளங்கோவன் (53), உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். பள்ளி சான்றிதழ்களில் தலைமை ஆசிரியர் இருக்கும்போது கூட இளங்கோவன் கையெழுத்து போடுவாராம். இதை ராமதாஸ் கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன், தலைமை ஆசிரியர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனை பார்த்த சக ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசில் தலைமை ஆசிரியர் ராமதாஸ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் விசாரணை நடத்தி வருகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/14/2013 5:06:25 PM
-Updated 2/14/2013 5:06:16 PM
-Updated 2/14/2013 4:50:52 PM
-Updated 2/14/2013 4:50:42 PM
-Updated 2/14/2013 4:50:33 PM
-Updated 2/14/2013 4:50:14 PM
-Updated 2/14/2013 4:50:05 PM
-Updated 2/14/2013 4:49:56 PM
-Updated 2/14/2013 4:49:46 PM
-Updated 2/14/2013 4:49:38 PM
-Updated 2/14/2013 4:49:29 PM
-Updated 2/14/2013 4:49:19 PM
-Updated 2/14/2013 4:49:11 PM
-Updated 2/14/2013 4:49:01 PM
-Updated 2/13/2013 3:53:28 PM