புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெதர்லாந்து கைதி மரணம்
புழல்: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கைதி திடீரென இறந்தார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் வில்லியம். (60). திருட்டுத்தனமாக வயர்லெஸ் வைத்திருந்ததாகவும் வீட்டில் உள்ள அறையில் ஒருவரை பூட்டிவைத்து சித்ரவதை செய்ததாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2011ம் ஆண்டு மே மாதம் புழல் மத்திய சிறையில் வில்லியம் அடைக்கப்பட்டார். சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட அவரை ராயப்பேட்டை அரசு மருத் துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை வில்லியம் இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கு கைதி பாக்கியராஜ் (30) என்பவர் நேற்று இறந்தது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/14/2013 5:06:25 PM
-Updated 2/14/2013 5:06:16 PM
-Updated 2/14/2013 4:50:52 PM
-Updated 2/14/2013 4:50:42 PM
-Updated 2/14/2013 4:50:33 PM
-Updated 2/14/2013 4:50:14 PM
-Updated 2/14/2013 4:50:05 PM
-Updated 2/14/2013 4:49:56 PM
-Updated 2/14/2013 4:49:46 PM
-Updated 2/14/2013 4:49:38 PM
-Updated 2/14/2013 4:49:29 PM
-Updated 2/14/2013 4:49:19 PM
-Updated 2/14/2013 4:49:11 PM
-Updated 2/14/2013 4:49:01 PM
-Updated 2/13/2013 3:53:28 PM