குடிசை வீட்டில் உயிருடன் எரித்து கொல்லப்பட்டது தமிழக வாலிபரா? : 2 தனிப்படை போலீசார் விசாரணை
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லையான சத்தியவேட்டில் குடிசை வீட்டில் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இறந்தவர் தமிழகத்தை சேர்ந்த வாலிபரா என்று ஆந்திர தனிப்படை போலீசார் விசாரிக்கிறார்கள். ஊத்துக்கோட்டை அருகே சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் பலராமன் (55), கூடை பின்னும் தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பலராமன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள மகன் வீட்டிற்கு தூங்க சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது குடிசை வீடு முழுவதும் எரிந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் எரிந்து கரிகட்டையாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சத்தியவேடு போலீசாருக்கு தெரிவித்தார்.
தகவலறிந்து இன்ஸ்பெக்டர் ரவி மனோகர், எஸ்ஐ ஈஸ்வர் ஆகியோர் விரைந்து வந்து விசாரித்தனர். இறந்த வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவரது பெயர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பலராமன் குடிசை வீடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளதால் மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக வாலிபரை ஆந்திராவிற்கு கடத்தி வந்திருக்கலாம். குடிசை வீட்டில் வைத்து சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர போலீசார் ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி, ஆரம்பாக்கம், சென்னை உள்ளிட்ட இடங்களில் வாலிபர் யாராவது காணாமல் போனதாக புகார் உள்ளதா என்று விசாரிக்கிறார்கள். உயிருடன் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/11/2025 5:20:54 PM
-Updated 2/11/2025 5:20:45 PM
-Updated 2/11/2025 5:20:36 PM
-Updated 2/11/2025 5:20:26 PM
-Updated 2/11/2025 4:55:46 PM
-Updated 2/11/2025 4:55:38 PM
-Updated 2/11/2025 4:55:29 PM
-Updated 2/11/2025 4:55:19 PM
-Updated 2/11/2025 4:54:40 PM
-Updated 2/11/2025 4:54:31 PM
-Updated 2/11/2025 4:54:23 PM
-Updated 2/9/2025 1:29:07 PM
-Updated 2/9/2025 1:28:58 PM
-Updated 2/9/2025 12:42:18 PM
-Updated 2/9/2025 12:42:10 PM