படப்பையில் பராமரிப்பின்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனையில் குடிமகன்கள் அட்டூழியம்
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை, மணிமங்கலம், சாலமங்கலம், ஒரத்தூர், செரப்பணஞ்சேரி,ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமங்களில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை செய்து கொள்ள படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ் படப்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தினமும் 50க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். கடந்த 1970ல் கால்நடை மருத்துவமனைக்காக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. செடி, கொடிகள் படந்து விஷ பூச்சி நடமாட்டம் உள்ளது.
இந்த கட்டிடங்களை பகல், இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி ‘பார்‘ஆக பயன்படுத்தி வருகின்றனர். காலி மது பாட்டில்கள், கிளாஸ்களை வீசி செல்கிறார்கள். இது குறித்து அங்கு பணியாற்றும் டாக்டர் கேட்டால் போதையில் வாக்குவாதம் செய்கிறார்கள். மேலும் இரவில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. எனவே மருத்துவமனை வளாகத்தினை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, பாழடைந்துள்ள கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மருத்துமனைக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மதுகுடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படப்பை பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/9/2025 1:29:07 PM
-Updated 2/9/2025 1:28:58 PM
-Updated 2/9/2025 12:42:18 PM
-Updated 2/9/2025 12:42:10 PM
-Updated 2/9/2025 12:42:01 PM
-Updated 2/9/2025 12:41:49 PM
-Updated 2/9/2025 12:41:41 PM
-Updated 2/9/2025 12:17:34 PM
-Updated 2/9/2025 12:17:26 PM
-Updated 2/9/2025 12:17:16 PM
-Updated 2/9/2025 12:17:08 PM
-Updated 2/9/2025 12:17:00 PM
-Updated 2/9/2025 12:16:52 PM
-Updated 2/9/2025 12:16:41 PM
-Updated 2/9/2025 12:16:34 PM