Tamil Month Rasi Palan Maasi 2013
2013
04
Feb
சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆண் பிணம்


சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆண் பயணியின் சடலம் கிடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 8வது பிளாட்பாரத்தில் இன்று அதிகாலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் அங்கிருந்த இருக்கை ஒன்றில் பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் எழுப்ப முயன்ற போது அவர் இறந்து விட்டது தெரிந்தது. அவரிடம் உடமைகள்  ஏதுமில்லை. அதனால் அவர் யார் என்று விவரம் தெரியவில்லை. ஏற்கனவே 4 மணிக்கு அந்த பக்கம் ரோந்து சென்ற போது அங்கு யாரும் இல்லை.

எனவே அப்போது 8வது நடைமேடையில் வந்து நின்ற அவுரா மெயிலில் இருந்து அவர் இறங்கியிருக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின்படி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துக் கிடந்தவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறார். வெளி மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு நிறைய பேர் வருகின்றனர். அப்படி வந்தவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel