திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் பெரிய சேக்காடு கிருஷ்ணா நகரில் ரூ.9 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இங்கு சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு மரம், அழகிய பூஞ்செடிகள் உள்ளிட்டவை சுற்றுச்சுவருடன் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இதனால், பூங்காவில் முட்செடிகள் முளைத்தும், புதற்கள் மண்டியிட்டும், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் பழுதாகியும், உடைந்தும் உள்ளன. மேலும், இரவு நேரங்களில் இந்த பூங்கா மது அருந்தும் பாராவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது. இதனால், அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/6/2025 5:36:25 PM
-Updated 2/6/2025 5:24:45 PM
-Updated 2/6/2025 5:24:36 PM
-Updated 2/6/2025 5:24:16 PM
-Updated 2/6/2025 5:24:06 PM
-Updated 2/6/2025 5:23:56 PM
-Updated 2/6/2025 5:23:33 PM
-Updated 2/6/2025 2:56:02 PM
-Updated 2/6/2025 2:55:47 PM
-Updated 2/6/2025 2:47:10 PM
-Updated 2/5/2025 5:22:47 PM
-Updated 2/5/2025 5:22:38 PM
-Updated 2/5/2025 5:22:29 PM
-Updated 2/5/2025 4:50:12 PM
-Updated 2/5/2025 4:50:02 PM