Thai Poosam Function 2013
2013
02
Feb
பைக் மீது லாரி மோதல் எஸ்ஐ மகன் பரிதாப சாவு


ஆவடி: லாரி மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு எஸ்ஐ மகன் பரிதாபமாக இறந்தார். ஆவடி அடுத்த பட்டாபிராம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சம்பத் (50). அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர். இவரது மகன் வினோத் (22). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். தினமும் வினோத் பைக்கில் வேலைக்கு போவது வழக்கம். இன்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பைக்கில் சென்றார். பட்டாபிராம் பூந்தமல்லி நெடுஞ்சாலை அணைக்கட்டு சேரி அருகே வரும்போது எதிரே வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் இருந்து விழுந்த வினோத் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வினோத் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana