தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் கூட்டம்
திருவொற்றியூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் கிளாஸ்பேக்டரி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தராஜ் வரவேற்றார். மாநில தலைவர் விக்கிரமராஜா சங்க பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மருத்துவ நிதியாக ரூ.20 ஆயிரத்தை விக்கிரமராஜா வழங்கினார். சங்க நிர்வாகிகள் சதக்கத்துல்லா, ராபர்ட், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூரில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே முடிக்கவேண்டும். பிப்ரவரி 12ம் தேதி வானகரத்தில் நடைபெற உள்ள முற்றுகை பேராட்டத்திற்கும், மார்ச் 7ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பேரணிக்கும் வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:36:55 PM
-Updated 2/2/2025 1:36:46 PM
-Updated 2/2/2025 1:36:37 PM