நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை : தமிழக அரசுக்கு ஐஜேகே பாராட்டு
சென்னை: ஐஜேகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்ட தொடர் நேற்று நடைபெற்றது. அதில் கவர்னரின் உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது ஏமாற்றமே. குறிப்பாக, தமிழக மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் எந்த தொலைநோக்கு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை தொடரும் என்று கவர்னர் அறிவித்துள்ளார். இந்த அன்னிய முதலீடுகள் மாற்று வழிகளில் நுழைந்து விடாமல் அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மத்திய அரசு தேசிய நதி நீர் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் செய்வதால் தமிழகத்துக்குள் பாயும் நதிகளை ஒன்றிணைக்கும் திட்டத்துககு மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது வரவேற்க கூடியது. மாநிலத்திற்குள் பாயும் நதிகளை ஒன்றிணைப்பது அவசர அவசிய தேவையாகும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:37:04 PM
-Updated 2/2/2025 1:36:55 PM
-Updated 2/2/2025 1:36:37 PM