ஸ்ரீகாகுளம்: அரிய வகை கிளிகளை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீகாகுளம் பகுதியில் வாகன சோதனையில் இருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் அதில் கிளிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த கோபால் மற்றும் துர்கா ஆகியோரிடம் இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக கிளிகளை கடத்தியது உறுதியானது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிவாசிகள் சிலரிடம் இருந்து கிளிகளை வாங்கி அதிக விலைக்கு விற்க இருந்தது விசாரணையில் தெரியவந்தது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 232 கிளிகளில் 6 மூச்சு திணறி இறந்து விட்டன. மற்ற கிளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:37:04 PM
-Updated 2/2/2025 1:36:55 PM
-Updated 2/2/2025 1:36:46 PM