காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வீடு புகுந்து திருடியவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள மன்னன் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவரது தம்பி ராமதாஸ் (35). கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். வந்தவாசி அருகே உள்ள மருதாடு கிராமத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு 2 பேரும் சென்றனர். இவர்களது தாய் கன்னியம்மாள் தனியாக இருந்தார். நள்ளிரவு வீட்டில் ஆட்கள் நடமாடியதை பார்த்து கன்னியம்மாள் சத்தம் போட்டார். இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். அப்போது வீட்டில் இருந்து 3 பேர் ஓடினர். இதில் ஒருவர் சிக்கி கொண்டார். அவரை சரமாரியாக அடித்து உதைத்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர் வந்தவாசி மருதாடு கிராமத்தை சேர்ந்த குமரேசன் (45) என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியம்மாள் கொடுத்த புகாரில், பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது என கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/22/2013 4:58:26 PM
-Updated 1/22/2013 4:58:14 PM
-Updated 1/22/2013 4:58:02 PM
-Updated 1/22/2013 4:57:50 PM
-Updated 1/22/2013 4:57:40 PM
-Updated 1/22/2013 4:57:31 PM
-Updated 1/22/2013 4:57:22 PM
-Updated 1/22/2013 4:57:13 PM
-Updated 1/22/2013 4:57:03 PM
-Updated 1/22/2013 4:48:43 PM
-Updated 1/22/2013 4:48:27 PM
-Updated 1/22/2013 4:06:30 PM
-Updated 1/22/2013 4:06:18 PM
-Updated 1/22/2013 2:35:29 PM
-Updated 1/22/2013 2:07:23 PM