சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு, விநியோகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உணவு துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆர்.கார்த்தி கேயன், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்ட மண்டல மேலாளர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 201112ல் இந்த பருவத்தில் 23.82 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து ரூ.149 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்த வருடமும் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70ம், சாதா ரக நெல்லுக்கு ரூ. 50ம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1350க்கும், சாதா ரக நெல் ரூ.1,300க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் கோரும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட வேண்டும். இதுதவிர நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அனைத்து விவசாயிகள், கோயில் நிலங்கள் வசம் இருக்கும் நெல் முழுவதும் அவரவர் இடத்திலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலுகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்து, உரிய தொகை அந்த இடத்திலேயே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/22/2013 4:58:26 PM
-Updated 1/22/2013 4:58:14 PM
-Updated 1/22/2013 4:58:02 PM
-Updated 1/22/2013 4:57:50 PM
-Updated 1/22/2013 4:57:40 PM
-Updated 1/22/2013 4:57:31 PM
-Updated 1/22/2013 4:57:22 PM
-Updated 1/22/2013 4:57:13 PM
-Updated 1/22/2013 4:57:03 PM
-Updated 1/22/2013 4:48:43 PM
-Updated 1/22/2013 4:48:27 PM
-Updated 1/22/2013 4:06:30 PM
-Updated 1/22/2013 4:06:18 PM
-Updated 1/22/2013 2:35:29 PM
-Updated 1/22/2013 2:07:23 PM