ரயில் நிலையத்தில் சிக்கிய 9 கிலோ நகைகளுக்கு 7.79 லட்சம் வரி
திருச்சி: மங்களூர்சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருச்சி வந்தது. அப்போது அந்த ரயிலில் ஏறிய 2 பெரிய டிராவல் பேக்குடன் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து ஆர்பிஎப் படையினர் சோதனை நடத்தினர். அதில் 9 கிலோ தங்க நகைகள் இருந்தது. திருச்சி சின்ன சவுராஷ்ட்ரா தெருவை சேர்ந்த அந்த வாலிபர் மனோஜ் (30), நகை வியாபாரி என்பதும் தெரியவந்தது. நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்து வந்த வணிகவரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள், வரியை செலுத்தி நகைகளை பெற்றுச் செல்லுமாறு அந்த வாலிபரிடம் கூறினர். அதன்படி ஆவணங்களை காண்பித்து வரியாக ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 500ஐ செலுத்தினர். அதன் பின்னர் நகைகள் ஒப்படைக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM