கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நகைக்கடை வைத்துள்ளவர் காஜா ரஷீத் (48). கடந்த 9ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு, கடை ஊழியர் ஷாஜு என்பவருடன் காரில் வீட்டுக்கு சென்றார். ஒரு பையில் 100 பவுன் நகை வைத்திருந்தார். அப்போது, மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் இவரது காரை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு, 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக மணிகண்டன், டேனியல் ராஜ், தேவேந்திரன், ஹரீஸ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி பிரவீன் (30) என்பவரை தேடி வந்தனர். அவரை நேற்று மாலை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM