மாதவரத்தில் 4 சட்டமன்ற தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாதவரம் லட்சுமிபுரத்தில் நேற்று நடந்தது. மாநில துணை பொது செயலாளர் ரவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணா வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மதுரைக்குள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் நுழைய தடைவிதித்த அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஆயிரம் இளைஞர்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் ரவி, செல்வராஜ், பூபதி, யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM