பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 15 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் அம்மு மாதவன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சூரியநாராயண மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ராமஞ்சேரி, சித்தம்பாக்கம் காலனி, போந்தவாக்கம் ஊராட்சிகளில் ரூ.6 லட்சத்தில் சிறுமின்விசை மோட்டார் பம்பு அமைக்க வேண்டும். திருப்பேர் ஊராட்சி பங்காரம்பேட்டை ராமர் கோயில் தெரு, மெய்யூர் ஊராட்சி ராஜபாளையத்தில் சுடுகாடு சாலைகளை ரூ.9 லட்சத்தில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமஞ்சேரி ஊராட்சி தலைவர் மாதவன், மாவட்ட கவுன்சிலர்கள் வெங்கட்ரமணா, தமிழ்ச்செல்வி ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM