திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புங்கத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் (37), கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம் திருமழிசை நெடுஞ்சேரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு பைக்கில் சென்றார். திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் புதுசத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளைவில் திரும்பும்போது பைக்குடன் தடுமாறி ரோட்டில் விழுந்தார். தலையில் படுகாயத்துடன் துடித்த அவரை, அந்த பகுதியினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சீனிவாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM
-Updated 1/3/2025 2:21:06 PM
-Updated 1/3/2025 2:20:24 PM
-Updated 1/3/2025 2:14:01 PM
-Updated 1/3/2025 2:13:50 PM
-Updated 1/3/2025 2:13:40 PM
-Updated 12/31/2012 2:54:31 PM