விளையாட்டுகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான தடகளம், கோகோ, வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நந்திவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஜெயகுமார் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெய்சங்கர், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:53 PM
-Updated 11/27/2012 3:13:42 PM