கோவை: கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் சபரிநாதன்(33). இரு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மாவட்ட ஆர்எஸ்எஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். செட்டி வீதியில் இவரது அலுவலகம் மற்றும் பைக் ஷோரூம் உள்ளது. கடன் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராதவர்களின் வாகனங்கள் உள்பட பல பைக்குகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை ஒரு மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி கடைக்கு தீ வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சென்று விசாரித்தனர். தீயணைப்பு படையினர் சென்று கதவை திறந்து தீயை அணைத்தனர். கடைக்குள் பைக்குகள் உள்ளிட்ட ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதில், 7 வாகனங்கள் எரிந்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/12/2024 3:10:12 PM
-Updated 11/12/2024 3:09:59 PM
-Updated 11/12/2024 3:08:07 PM
-Updated 11/12/2024 2:53:37 PM
-Updated 11/12/2024 2:42:18 PM
-Updated 11/12/2024 2:41:48 PM
-Updated 11/12/2024 12:21:58 PM
-Updated 11/12/2024 12:17:59 PM
-Updated 11/12/2024 11:52:56 AM
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM