ஆலந்தூர்: ‘நிலம்’ புயல் காரணமாக ஆலந்தூர் பகுதியில் சாலையில் விழுந்த மரங் களை அகற்றும் பணி நேற்றும், இன்றும் நடந்து வருகிறது. நந்தம்பாக்கத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி சாலை, உட்கிரீக் கவுன்டி சாலை, பர்மா காலனி, காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் 35 மரங்கள் சாய்ந்தது. ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் மோகன் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர்கள் முரளி, மகேசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். 158, 159, 160 வார்டுகள் மற்றும் 162வது வார்டு தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், 163வது வார்டு சாந்தி நகர், யாதவர் தெரு போன்ற பகுதிகளில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 66 மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த பணியின்போது, மண்டல குழு தலைவர் வெங்கட்ராமன், கவுன்சிலர்கள் ராஜசேகர், முத்து, கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM
-Updated 11/2/2025 3:51:18 PM
-Updated 11/2/2025 3:51:07 PM
-Updated 11/2/2025 3:50:47 PM