சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சிவகங்கை குணசேகர் (இந்திய கம்யூ.) பேசுகையில், ‘சிவகங்கை தொகுதியில் மருது சகோதரர்கள் நினைவிடம் உள்ள, காளையார் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அதேபோல் சுதந்திர போராட்டத்தின் போது, தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்ட வீரமங்கை வேலு நாச்சியாருக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்Õ என்றார். அதற்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலில், ஆங்கிலேயர்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட வீரமங்கை வேலு நாச்சியாருக்கு காளையார் கோவில் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்படும்’ என்றார். இதையடுத்து, குணசேகரன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தென் தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM
-Updated 11/2/2025 3:51:29 PM
-Updated 11/2/2025 3:51:18 PM
-Updated 11/2/2025 3:50:47 PM