பவர்கட்டுக்கு தமிழக அரசின் திறமையில்லாத நிர்வாகமே காரணம் : ராமதாஸ்
திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் மின் தேவை 11,539 மெகாவாட். உற்பத்தி, மத்திய தொகுப் பில் இருந்து கிடைத்தது 8,500 மெகாவாட். 2 ஆயிரம் மெகாவாட் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டது. இதனால் பற்றாக்குறை ஓரளவு குறைந்தது. அதிமுக ஆட்சியில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. உற்பத்தி 8 ஆயிரம் மெகாவாட். பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்து உள்ளது. இதனால் 14 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது.
தமிழக அரசின் திறமையில்லாத நிர்வாகமே இதற்கு காரணம். மின்உற்பத்தி நிலையங்கள் பராமரிக்கப்படாதது, புதிய திட்டங்களை செயல்படுத்தாதது போன்றவற்றால் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என மறுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவ்வாறு கூறியதற்கான ஆதாரங்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயாரா? இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM
-Updated 11/2/2025 3:51:29 PM
-Updated 11/2/2025 3:51:18 PM
-Updated 11/2/2025 3:51:07 PM